பேருந்து விபத்தில் 38 பேர் பலி -ஆப்கானிஸ்தானில் பரிதாபம்!
Sunday, September 4th, 2016
ஆப்கானிஸ்தானில் கொள்கலன் லொறியுடன் பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 38 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் கந்தஹார் நகரில் இருந்து காபுல் நோக்கி இன்று காலை பயணிகளுடன் சென்ற பேருந்து சாபுல் மாகாணம் வழியாக சென்றபோது எதிர்திசையில் வேகமாக வந்த பெற்றோல் கொள்கலன் லொறியுடன் மோதுண்டது.
இந்த கோர விபத்தில் 38 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றனர். மேலும், இவ்விபத்தில் படுகாயமடைந்த 28 பேர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts:
பிரான்ஸ் பயணத்தை இரத்து செய்தார் புதின்!
தமிழகத்தின் 13வது முதல்வராக பழனிசாமி பதவியேற்பு!
மார்ச் வரை அனைத்து பாடசாலைகளும் மூடப்படும்!
|
|
|


