பிரான்ஸ் பயணத்தை இரத்து செய்தார் புதின்!

Wednesday, October 12th, 2016

அடுத்த வாரம் பிரான்ஸூக்கு மேற்கொள்ள இருந்த பயணத்தை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இரத்து செய்திருக்கிறார். ரஷ்ய பழமைவாத தேவாலய திறப்பு விழாவில், பிரான்ஸ் அதிபர் பிரான்சுவா ஒலாந்துடன் கலந்துகொள்ள இருந்த திட்டம் புதினுக்காக கைவிடப்பட்ட பிறகு, புதின் இந்த முடிவை எடுத்திருப்பதாக கிரம்ளின் கூறியுள்ளது.

எந்தவொரு சந்திப்பும், சிரியா பற்றிய பேச்சுவார்த்தையை உள்ளடக்கியதாக இருக்க வேண்டுமென ஒலாந்த் வலியுறுத்தியதாக பிரான்ஸ் அதிகாரிகள் கூறியிருக்கின்றனர். ரஷ்யாவோடு பேச்சுவார்த்தை நடத்துவது தேவையானது. ஆனால், அது உறுதியானதாகவும், வெளிப்படையானதாகவும் இருக்க வேண்டும் என்று ஐரோப்பிய கவுன்சில் கூட்டத்தில் உரையாற்றிபோது ஒலாந்த் கூறினார்.

ரஷ்யா குண்டு தாக்குதல்களை நிறுத்தி, போர்நிறுத்தத்தை அறிவித்து அமைதியை முன்னெடுக்கும்போது எந்த நேரத்தில் வேண்டுமானாலும் அந்நாட்டு அதிபரை சந்திக்க தயாராக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

சிரியாவின் அலெப்போ நகரில் ரஷ்ய ஆதரவோடு மேற்கொள்ளப்படும் வான்வழித் தாக்குதலை உடனடியாக நிறுத்த, ஐநா பாதுகாப்பவையில் பிரான்ஸ் சனிக்கிழமை கொண்டு வந்த தீர்மானத்தை, ரஷ்யா தன்னுடைய வெட்டு அதிகாரத்தை பயன்படுத்தி ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.

_91770673_d0aff2a6-5bdb-4303-92ee-2acbdc273ced

Related posts: