பெல்ஜியம் தாக்குதல்: தேடுதல் வேட்டையில் அறுவர் கைது!
Friday, March 25th, 2016
பிரேஸிலசில் கடந்த செவ்வாயன்று நடந்த தாக்குதலில் முப்பதுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட மிகப் பெரிய தேடுதல் வேட்டையில் பெல்ஜிய காவல் துறையினர் ஆறு பேரை கைது செய்துள்ளனர்.
இந்தக் கைது சம்பவங்களுக்குப் பின்னர் பிரஸ்ஸல்ஸ் நகரின் மையப் பகுதி உள்பட, பல மாவட்டங்களில் வீடு வீடாக தேடுதல் நடத்தப்பட்டது.
கைது செய்யப்பட்டவர்களின் அடையாளங்கள் இன்னமும் வெளியிடப்பட்டவில்லை. இந்த தாக்குதலுக்கு பிறகு தப்பித்து ஓடியதாக நம்பப்படும் குறைந்தது இரண்டு சந்தேக நபர்களையாவது அடையாளம் கண்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
குண்டு வெடிப்பு இடம்பெற்ற ரயில் நிலையம் மற்றும் விமான நிலையத்தில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் எடுக்கப்பட்ட படத்தில், தற்கொலை குண்டுதாரிகளுடன் இந்த சந்தேக நபர்கள் காணப்பட்டனர்.
இதனிடையே ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பெல்ஜிய அதிகாரிகளுடனான பயங்கரவாத தடுப்பு பேச்சுக்களுக்காக அமெரிக்க அரசுத்துறைச் செயலர் ஜான் கெரி பிரஸிலஸ் இன்று சென்றடைந்துள்ளார்.
Related posts:
|
|
|


