அதிபர் தேர்தலில் 22 ஆண்டுகளாக ஆட்சி செய்த யாக்யா ஜமே தோல்வி – மக்கள் கொண்டாட்டம்!

Saturday, December 3rd, 2016

காம்பியாவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில், நாட்டின் தலைவராக கடந்த 22 ஆண்டுகளாக பதவி வகித்த யாக்யா ஜமே தோல்வியடைந்துள்ளதாக அந்நாட்டின் தேர்தல் ஆணையத்தின் தலைவர் அறிவித்துள்ளார்.

காம்பியாவின் முக்கிய எதிர்க்கட்சி வேட்பாளரான அடாமா பாரோ கடந்த வியாழக்கிழமையன்று நடைபெற்ற தேர்தலில் சுமார் 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இந்த தேர்தல் முடிவு குறித்து இதுவரை யாக்யா ஜமேவிடமிருந்து எந்த கருத்தும் வெளிவரவில்லை.

முன்னர், கடவுள் விருப்பப்பட்டால் தன்னால் ஒரு பில்லியன் ஆண்டுகள் கூட ஆட்சி செய்ய முடியும் என்று கூறியிருந்தார். 1994 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சி மூலம் அதிகாரத்திற்கு வந்த ஜமே, செய்தியாளர்கள், எதிர்க்கட்சிகள் மற்றும் ஒருபாலுறவுக்காரர்கள் நடத்தப்பட்ட விதம் குறித்து மனித உரிமை குழுக்களால் விமர்சனங்களுக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.

_92811241_gettyimages-626971748

Related posts: