மஞ்செஸ்டர் தாக்குதல் ஒளிப்படங்கள் அமெரிக்க ஊடகங்களில்!  

Friday, May 26th, 2017

பிரித்தானிய மஞ்செஸ்டர் தாக்குதல் தொடர்பான ஒளிப்படங்கள் சில அமெரிக்க ஊடகங்களுக்கு கசிந்ததைத் தொடர்ந்து அது தொடர்பில் பிரித்தானிய பிரதமர் தெரேசா மே அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் கலந்துரையாடவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஞ்செஸ்டர் தாக்குதலின் பின்னர் எடுக்கப்பட்ட பல ஒளிப்படங்கள் அமெரிக்க நியூயோர்க் டைம்ஸ் (New York Times) பத்திரிகையில் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்தே இந்த விடயம் தொடர்பில் கவனத்தை செலுத்தவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த விடயத்திற்கு அமெரிக்க சட்ட அமுலாக்க பிரிவினரே பொறுப்புக்கூற வேண்டும் என சர்வதேச ஊடகம் ஒன்றும் தகவல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.மேலும், இவ்விடயம் தொடர்பில் நேட்டோ உச்சிமாநாட்டில் கவனம் செலுத்த பிரித்தானிய பிரதமர் தெரேசா மே தீர்மானித்துள்ளதாக அண்மைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரஸ்ஸல்ஸில் நேற்று ஆரம்பமான நேட்டோ உச்சிமாநாடு  இன்றும்  தொடரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.மஞ்செஸ்டர் தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டதுடன் 6 4பேர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலை நடத்தியவர் என தெரிவிக்கப்படும் 22 வயதுடைய சல்மான அபேடியும் குறித்த சம்பவத்தின் போது உயிரிழந்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

Related posts: