பாரிய நெருக்கடியில் பிரித்தானிய பவுண்ட்!

Monday, October 2nd, 2017

அமெரிக்க டொலருக்கு எதிராக பாரிய வீழ்ச்சியை ஸ்ரேலிங் பவுண்ட் பதிவு செய்துள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த ஒரு வார காலப்பகுதியில் டொலர் வளர்ச்சி அடைந்த போதிலும், பவுண்ட் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. டொலருக்கு எதிராக 0.7 வீத வீழ்ச்சியை பவுண்ட் பதிவு செய்துள்ளது.கிட்டத்தட்ட இரண்டு வருட காலமாக பவுண்ட் பாரிய வீழ்ச்சியை சந்தித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைய எதிர்வரும் மாதங்களில் வங்கிகளின் வட்டி வீதங்கள் அதிகரிக்கப்படலாம் என பிரித்தானிய மத்திய வங்கி தெரிவித்துள்ளது.ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒற்றைச் சந்தையில் முன்னுரிமை பெறுவதை பிரித்தானியா எவ்வாறு உறுதிப்படுத்துகிறது என்பது குறித்து பிரித்தானிய பிரதமர் அண்மையில் தெரிவித்திருந்தார்.இது தொடர்பான விபரங்களை கொடுக்க முடியாமையினால் முதலீட்டாளர்கள் ஏமாற்றமடைந்துள்ளதாக பிரிதமர் குறிப்பிட்டிருந்தார்.அதற்கமைய டொலருக்கு எதிராக பவுண்ட் கடுமையாக போராடி வருகின்றதென குறிப்பிடப்படுகின்றது.தெரசா மேயின் உரைக்கு பிறகு நிலைமை இன்னும் கொஞ்சம் எதிர்மறையாக உள்ளதென பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related posts: