டிரம்புக்கு சிக்கல்? தேர்வாளர்கள் மாற்றி வாக்களிக்க பிரசாரம்!

Tuesday, December 20th, 2016

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தேர்வாளர்கள் தங்களது வாக்குகளை மாற்றி வாக்களிக்கும்பட்சத்தில் ஹிலாரி ஜனாதிபதியாகும் வாய்ப்பு உள்ளது. இதுதொடர்பாக தகவல் வெளியானதால் டிரம்ப் ஜனாதிபதியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கடந்த நவம்பர் 8-ம் திகதி நடந்தது. அதில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் எதிர்பாராதவிதமாக வெற்றி பெற்றார். ஜனநாயக கட்சியின் ஹிலாரி கிளிண்டன் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

ஹிலாரி கிளிண்டன் 26 இலட்சம் ‘பாப்புலர் வாக்கு ’ எனப்படும் மக்கள் ஓட்டுகளை பெற்றுள்ளார். இது டிரம்ப் பெற்ற வாக்குகளை விட அதிகம். இருந்தாலும் அமெரிக்க அரசியல் சட்டப்படி ‘எலெக்டோரல் காலேஜ் எனப்படும் தேர்வாளர்களின் வாக்குகளை அதிகம் பெற்று டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். டிரம்புக்கு 306 தேர்வாளர்களும், ஹிலாரிக்கு 232 தேர்வாளர்களும் கிடைத்துள்ளனர்.

டிரம்ப் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டாலும் தேர்வாளர்கள் ஓட்டுகள் தான் அதிகாரபூர்வமான அதிபரை முடிவு செய்கிறது. அதற்கான தேர்தல் இன்று 20-ம் திகதி இரவு நடைபெறுகிறது. இதற்கிடையே, தேர்வாளர்கள் டிரம்புக்கு எதிராக வாக்களிக்க வேண்டும். ஹிலாரியை ஆதரித்து வெற்றி பெறச் செய்து அவரை ஜனாதிபதியாக்க வேணடும் என்ற பிரசாரம் தொடங்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள குடியரசு கட்சி தேர்வாளர்களுக்கு நூற்றுக்கணக்கான மெயில்கள், ஈ-மெயில்கள் மற்றும் தொலைபேசி அழைப்பு மூலம் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கைகள் வந்த வண்ணம் உள்ளன.

டிரம்பின் உணர்ச்சி மிகு பேச்சு மற்றும் செயல்பாட்டினால் நாடு மற்றொரு போரை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். எனவே ஹிலாரி வெற்றி பெற மாற்றி வாக்களியுங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரிசோனாவைச் சேர்ந்த குடியரசு கட்சியின் தேர்வாளர் கரோல் ஜாய்சுக்கு கிறிஸ்மஸ் வாழ்த்து அட்டை அனுப்பப்பட்டுள்ளது.

அதில் கடவுள் பெயரால் சொல்கிறேன். டிரம்புக்கு வாக்களிக்காதீர்கள். நான் பல இறுதி சடங்குகளை பார்த்து விட்டேன். சோக கீதம் இசையை கேட்டு அலுத்து விட்டது. எனவே உங்களுக்கு தாழ்மையான இந்த வேண்டுகோள் விடுக்கிறேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்று அனைத்து குடியரசு கட்சி தேர்வாளர்களுக்கும் வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டுள்ளன. ஒருவேளை அதை ஏற்று 38 தேர்வாளர்கள் மாற்றி வாக்களித்தால் போதும். 270 வாக்குகளை பெற்று ஹிலாரி ஜனாதிபதியாகி விட முடியும். இப்பிரச்சினையால் டிரம்ப் அதிபராவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் தேர்வாளர்கள் தேர்தலில் டிரம்ப், ஹிலாரி ஆகிய இருவரும் 270 வாக்குகள் பெறாவிட்டால் ஜனாதிபதி தேர்ந்தெடுக்கும் உரிமை பாராளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபைக்கு சென்று விடும்.

76col142659741_5099312_19122016_AFF_CMY

Related posts: