எண்ணெய் கப்பலில் தீ!

Sunday, September 25th, 2016

மெக்சிகோவுக்கு சொந்தமான பெமெக்ஸ் பெற்றோலிய நிறுவனத்தின் எண்ணெய் கப்பலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஆயிரக்கணக்கான பெற்றோல் மற்றும் டீசல் கொள்கலன்கள் சேதமடைந்துள்ளது.

கோட்ஸாகோல்கோஸ் துறைமுகத்திலிருந்து வெராகுருஸ் துறைமுகம் நோக்கி டீசல் மற்றும் பெற்றோல் கொள்கலன்களை ஏற்றியபடி மெக்சிகோ வளைகுடா வழியாக நேற்று சென்று கொண்டிருந்த குறித்த கப்பல் வெராகுருஸ் மாநிலத்தில் உள்ள போக்கா டெல் ரியோ கடலோரப் பகுதியை நெருங்கியபோது திடீரென தீ பிடித்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன

கப்பலிருந்த பணியாளர்கள் தீயை அணைப்பதற்கு முயற்சித்தும் அந்நடவடிக்கைகள் தோல்வியுற்ற நிலையில் அவரச படகுகள் மூலம் குறித்த பயணிகள் கப்பலிருந்து வெளியேறினர்.

தகவலறிந்து விரைந்துவந்த தீயணைப்பு வீரர்கள்பர்கோஸ்எண்ணெய் கப்பலில் கொளுந்துவிட்டு எரியும் தீயை அணைக்க போராடி வருவதாக மெக்சிகோ நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த கப்பலில் ஒரு இலட்சியத்தில் 68 ஆயிரம் பெற்றோல் மற்றும் டீசல் கொள்கலன்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Firefighting boats works to extinguish a fire aboard the tanker Burgos about seven nautical miles off the coast of the port city of Boca del Rio, Mexico, Saturday, Sept. 24, 2016. The tanker was carrying about 168,000 barrels of gasoline and diesel fuel. Mexico's Navy rescued 31 crew members and no injuries were reported. There were no immediate reports of fuel spills and the cause of the fire was unknown. (AP Photo/Ilse Huesca)

Related posts: