பெல்ஜியம் குண்டு தக்குதல் குறித்து எதுவும் தெரியாது –  சலா அப்தெசலம்

Friday, March 25th, 2016

பிரான்ஸ் தாக்குதலில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சலாஹ் அப்தெல்சம் கடந்த வாரம் பெல்ஜியம் தலைநகர் பிரஸெல்ஸில் கைது செய்யப்பட்டார். சலாஹ் அப்தெசலம் கைது செய்யப்பட்டு 4 நாட்கள் ஆன நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை பிரசெல்ஸ் விமான நிலையம் மற்றும் மெட்ரோ ரெயிலில் வெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டது.

இந்த வெடிகுண்டு தாக்குதலில் 35 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்திற்கு ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

இந்நிலையில், பிரஸெல்ஸ் தாக்குதல் குறித்து சிறையில் உள்ள சலா அப்தெசலமுக்கு எதுவும் தெரியாது என்று அவரது வழக்கறிஞர் கூறியுள்ளார்.

இது குறித்து நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே அவரது வழக்கறிஞர் ஸ்வென் மேரி செய்தியாளர்களிடம் பேசினார். ஸ்வென் மேரி கூறியதாவது:-

இந்த தாக்குதல் குறித்து இன்று அப்தெசலமிடம் கேட்கப்பட்டது. அப்தெசலம் தன்னுடைய எண்ணத்தை மாற்றிக்கொண்டார். விசாரணைக்காக பிரான்ஸ் திரும்ப விருப்பமாக உள்ளார். அப்தெசலம் பெல்ஜியம் போலீசாருடம் இணைத்துக் கொள்ள விரும்பவில்லை.

பிரஸெல்ஸ் தீவிரவாத வெடிகுண்டு தக்குதலுக்கான திட்டங்கள் குறித்து அப்தெசலமுக்கு எதுவும் தெரியாது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related posts: