புளோரிடா இரவு விடுதி கொலையாளி ஐ.எஸ்.தீவிரவாதி!

Tuesday, June 14th, 2016

புளோரிடா மாகாணத்தில் Pulse இரவு விடுதியில் 50 பேரை கொன்று வெறியாட்டம் நடத்திய நபர் தங்களது அமைப்பை சார்ந்தவர் என ஐ.எஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது.

நெஞ்சை உறைய வைக்கும் இச்சம்பவத்திற்கு பொறுப்பேற்றுக்கொண்டு அந்த அமைப்பு ஓடியோ தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் கொடூரமான சம்பவம் என கூறப்படும் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தை 29 வயதான ஒமர் மேட்டின் என்பவர் தனித்து நடத்தியுள்ளார்.

இந்நிலையில், ஐ.எஸ்.அமைப்பின் Amaq எனும் செய்திப் பிரிவு புளோரிடா தாக்குதல் சம்பவத்திற்கு முழு பொறுப்பேற்பதாக அறிவித்திருந்தது.

தற்போது அந்த அமைப்பின் Albayan வானொலியானது அதிர்ச்சிக்குள்ளாக்கும் தகவலை வெளியிட்டுள்ளது.

அதில், அமெரிக்காவில் உள்ள ஐ.எஸ் போராளியான ஒமர் மேட்டின் கடும் தாக்குதல் ஒன்றை நிகழ்த்தியுள்ளார். இரவு விடுதி ஒன்றில் புகுந்து பல எண்ணிக்கையிலான நபர்களை கொலை செய்துள்ளது மட்டுமின்றி நூற்றுக்கணக்கானோரை படுகாயமடையவும் செய்துள்ளார்.

இந்த திடீர் தாக்குதலானது கடந்த 16 ஆண்டுகளில் அமரிக்க வரலாற்றில் அதிக எண்ணிக்கையிலான நபர்களை உயிர்ப்பலி வாங்கியுள்ளது என அந்த வானொலி தகவலானது தெரிவிக்கின்றது.

புளோரிடா மாகாணத்தில் அமைந்துள்ள இந்த Pulse இரவு மதுபான விடுதியில்லத்தின் இசை நிகழ்ச்சி ஒன்றை ஆர்வலர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக உறுப்பினர்கள் சுமார் 350 பேர் கலந்துகொண்டுள்ளனர்.

அந்த நகரிலேயே ஓரின சேர்க்கையாளர்கள் ஒன்று கூடும் பிரபலமான பகுதி அது. தாக்குதலில் இருந்து உயிர் தப்பியவர்கள் விவரித்த சம்பவத்தில், வெறியாட்டத்தில் ஈடுபட்ட ஒமர் சிலரை கழிவறையில் அடைத்தும் வைத்துள்ளதாக தெரிய வந்தது.

அதிகாலை 2 மணி இருக்கும், விடுதி மூடப்படும் நேரம் அது அப்போது திடீரென்று துப்பாக்கிச்சூடு சத்தம் வெளியே கேட்டுள்ளதாக ஒருவர் தெரிவித்துள்ளார்.

வெளியே எச்சரிக்கை செய்துவிட்டு உள்ளே புகுந்த அந்த கொலைகாரன், துப்பாக்கியால் சரமாரியாக கண்மூடித்தனமாக சுட்டு வீழ்த்தியுள்ளான்.

மொத்தம் 30 முறை துப்பாக்கி சத்தம் கேட்டுள்ளதாகவும், திடீரென்று விளக்குகள் மொத்தமும் அணைந்ததாகவும், தங்களது மேலாடை முழுவதும் ரத்தம் பட்டிருப்பதை உணர்ந்ததாகவும், சம்பவத்தை நேரில் பார்த்த ஜூவன் ரிவேரா என்பவர் தெரிவித்துள்ளார்

Related posts: