விமானப் படையின் திறமையைக் கண்காணித்த வடகொரிய ஜனாதிபதி!

Wednesday, June 7th, 2017

விமானப் படையினருக்கு இடையில் நடத்தப்பட்ட போட்டி ஒன்றை வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன் கண்காணிப்பது தொடர்பான காணொளி ஒன்றை அந்நாட்டு அரச தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ளது.

குறித்த கண்காணிப்பு நடவடிக்கை நேற்று (திங்கட்கிழமை) மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியின் போது வடகொரியாவுக்கு சொந்தமான போர் விமானங்கள், அவற்றின் வல்லமையை காட்டும் வகையில் வானில் விரைந்து செயற்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், வானில் உயரப்பறக்கும் அதே சமயம் தரையில் உள்ள நிலைகளை குறி பார்த்து தாக்குவது தொடர்பிலும் போட்டி நடத்தப்பட்டுள்ளது. கடந்த வருடம் வடகொரியாவால் நடத்தப்பட்ட அணுவாயுத மற்றும் ஏவுகணை சோதனைகளைத் தொடர்ந்து, எரிபொருள் மற்றும் ஏனைய எண்ணெய் வகைகளை வடகொரியாவுக்கு ஏற்றுமதி செய்வதை சீனா நிறுத்திக்கொண்டது.

வடகொரியாவால் மேற்கொள்ளும் குறித்த சோதனை நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் என்ற காரணத்தினாலேயே சீனா மேற்படி நடந்துகொண்டது.எனினும், அதற்கு பதிலளித்திருந்த வடகொரியா, சுய பாதுகாப்பு கருதியே குறித்த ஏவுகணை மற்றும் அணுவாயுத சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்திருந்தது.

Related posts: