10 ஆண்டுகளாக பயங்கர வெடிகுண்டை பாதுகாத்த நபர்!

Monday, June 13th, 2016

பிரித்தானியாவில் போர் குறித்த ஆர்வலர் ஒருவர் இரண்டாம் உலகப்போரின் போது பயன்படுத்தாமல் விட்ட பயங்கர வெடிகுண்டை வீட்டு தோட்டத்தில் பாதுகாத்து வந்துள்ளார்.

போர் குறித்த ஆர்வலரான 26 வயது மார்க் தூசான் தமது வீட்டுத் தோட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளாக இரண்டாவது உலக போரின்போது பயன்படுத்தாமல் விட்ட வெடிகுண்டு ஒன்றை பாதுகாத்து வந்துள்ளார்.

தற்போது தமது தாயாரின் வற்புறுத்தலுக்கு பணிந்து ராணுவ வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் அளித்துள்ளார். அவர்கள் வந்து அந்த வெடிகுண்டை செயலிழக்க செய்துள்ளனர்.

மார்க் தங்கிருந்த வீட்டின் அருகாமையிலேயே சிறுவர்களுக்கான பாடசாலை ஒன்றும் செயல்பட்டு வந்துள்ளது.

பிளாக்பூல் பகுதியில் குடியிருந்து வரும் மார்க், போர் குறித்து மிகுந்த ஆர்வம் கொண்டவர். இதனால் போரில் பயன்படுத்தப்பட்ட பல்வேறு பொருட்களை சேகரித்து வந்துள்ளார்.

அதில் இந்த பயன்படுத்தப்படாத வெடிகுண்டும் ஒன்று. கடந்த 10 ஆண்டுகளாக இந்த வெடிகுண்டு இவரது வீட்டின் தோட்டத்திலேயே இருந்துள்ளது.

ராணுவத்தினரால் இந்த வெடிகுண்டு கடலில் தள்ளப்பட்டிருக்கலாம் எனவும் அது காலப்போக்கில் கரை சேர்ந்திருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர். இருப்பினும் இந்த வெடிகுண்டானது தற்போதும் சக்தி வாய்ந்த, வெடிக்கக் கூடியது எனவும் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் தரப்பில் இருந்து ராணுவத்தின் உதவியை நாடியதால் அவர்கள் வந்து நீண்ட மூன்று மணி நேர சோதனைகளுக்கு பின்னர் வெடிகுண்டை செயலிழக்க செய்துள்ளனர்.

வெடிகுண்டு நிபுணர்கள் வந்துள்ளதை கண்டு அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியுடன் காணப்பட்டனர், இருப்பினும் அப்பகுதியில் இருந்து எவரையும் வேறு பகுதிக்கு மாற்றப்படவில்லை.

Related posts: