புகையிரதம் தடம்புரண்டு 5 பேர் உயிரிழப்பு!

உத்தர பிரதேச மாநிலத்தில் எக்ஸ்பிரஸ் புகையிரதம் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உத்தர பிரதேச மாநிலம் ஹர்சந்த்பூர் புகையிரத நிலையம் அருகே நியூ பராக்கா எக்ஸ்பிரஸ் புகையிரதம் இன்று காலை தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. 6 பெட்டிகள் தடம்புரண்டதில் அதில் இருந்த பயணிகள் ஒருவர் மீது ஒருவர் விழுந்து பலத்த காயம் அடைந்தனர்.
இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
Related posts:
உளவுத்துறை உறவை வலுப்படுத்த வேண்டும் - ரஷ்ய ஜனாதிபதி!
ஐரோப்பிய ஒன்றிய பிரஜைகள் தொடர்ந்து பிரித்தானியாவில் இருக்க அனுமதி
2ஜி அலைக்கற்றை முறைக்கேடு வழக்கு - தீர்ப்பு வெளியானது!
|
|