புகழ்பெற்ற அகதிப் பெண்ணுக்கு இந்தியாவில் சிகிச்சை!

Monday, November 14th, 2016

நேஷனல் ஜியோகிராபிக் இதழின் அட்டைப்படம் மூலம் பிரபலமான ஆப்கானிஸ்தான் பெண்ணுக்கு இந்தியாவில் இலவச சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.

பாகிஸ்தானில் ஆப்கன் அகதியாக வசித்து வந்த சரபத் குலா என்பவர் நேஷனல் ஜியோகிராபிக் இதழால் ஆப்கன் போரின் முகம் என்று வர்ணிக்கப்பட்டவர்.

சமீபத்தில் போலியான ஆவணங்கள் மூலம் வசித்துவந்ததாக கூறி குலாவை, பாகிஸ்தான் அரசு நாடு கடத்தியது. பச்சை நிறக் கண்களால் உலகின் கவனம் ஈர்த்த குலா, கல்லீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வருகிறார். நாற்பது வயதை எட்டியுள்ள அவருக்கு இந்தியாவில் உள்ள பெங்களூரு மருத்துவமனை ஒன்றில் இலவச சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த தகவலை ட்விட்டரில் வெளியிட்டுள்ள இந்தியாவுக்கான ஆப்கானிஸ்தான் தூதர் ஷைதா அபாதி, அதற்காக இந்தியாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாவும் பதிவிட்டுள்ளார்.

கடந்த 1984ம் ஆண்டு பாகிஸ்தானில் உள்ள ஒரு அகதிகள் முகாமில் சரபத் குலா இருந்த போது எடுக்கப்பட்ட அவரது புகைப்படம் புகழ்பெற்ற ’நேஷனல் ஜியோகிராபிக்’ மேகசின் பத்திரிக்கையின் அட்டைப் படமாக மாறியது.சிலர் இப்புகைப்படத்தை உலக பிரசித்தி பெற்ற மோனாலிசாவின் புகைப்படத்துடன் ஒப்பிட்டும் பேசினர் என்பது குறிப்பிடத்தக்கது.

625.0.560.320.500.400.194.800.668.160.90

Related posts: