பிரெக்சிற்: தொடர்பில் அவசரமான ஒப்பந்தத்துக்கு வேண்டுகோள்!

Tuesday, October 24th, 2017

அவசரமான பிரெக்சிற் ஒப்பந்தமொன்றை பிரித்தானியாவின் 5 வணிக குழுவினர் கோரியுள்ளனர்.பிரித்தானியாவின் பிரெக்சிற்றுக்குப் பொறுப்பான அமைச்சர் டேவிட் டேவிஸுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘பிரெக்சிற் விவகாரம் தொடர்பில் அவசரமாக ஒப்பந்தமொன்றை முன்வைக்க வேண்டும் என்று நாம் கோருகின்றோம். ஏனெனில், உடனடியாக ஒப்பந்தமொன்றை முன்வைக்காவிடின் நாம் பாதிப்புகளை எதிர்நோக்க நேரிடும்.பிரித்தானியாவில் முதலீடுகளைச் செய்வதில் பாதிப்பு ஏற்படும் என்பதுடன், வேலைவாய்ப்புகளை இழக்கும் சூழ்நிலை ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: