தாய்வானில் 7.4 மெக்னிடியூட் அளவில் பாரிய நில அதிர்வு – ஆழிப்பேரலை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது!
Wednesday, April 3rd, 2024
தாய்வானில் 7.4 மெக்னிடியூட் அளவில் பாரிய நில அதிர்வு பதிவாகியுள்ளது. ஜப்பான், தாய்வான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் இந்த நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.
இதனையடுத்து ஜப்பானின் ஒக்கினாவா தீவு, மியா கோஜிமா தீவு உள்ளிட்டவற்றுக்கு ஆழிப்பேரலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுமார் 3 மீற்றர் உயரத்திற்கு கடல் அலை மேலெழக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இந்தநிலையில் குறித்த பகுதிகளில் உள்ள மக்களை வெளியேற்றும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அத்துடன் தாய்வானின் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
கலிபோனியாவில் காட்டுத்தீ : கட்டுப்படுத்த திணறும் தீயணைப்புப் படை!
இலங்கையின் நெருக்கடி - இந்திய மத்திய வங்கி மாநிலங்களுக்கு எச்சரிக்கை!
தற்போது நிலவும் வெப்பம் காரணமாக உடலுக்குத் தேவையான நீர் பற்றாக்குறையால் செல்கள் செயலிழக்கும் அபாயம் ...
|
|
|


