தற்போது நிலவும் வெப்பம் காரணமாக உடலுக்குத் தேவையான நீர் பற்றாக்குறையால் செல்கள் செயலிழக்கும் அபாயம் – சுகாதார அமைச்சகத்தின் வைத்திய நிபுணர் அன்வர் ஹம்தானி எச்சரிக்கை!

Wednesday, March 20th, 2024

நாட்டில் தற்போது நிலவும் வெப்பம் காரணமாக உடலுக்குத் தேவையான நீர் பற்றாக்குறையால் செல்கள் செயலிழக்கும் அபாயம் இருப்பதாக சுகாதார அமைச்சகத்தின் வைத்திய நிபுணர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.

ஆகவே வயது முதிர்ந்த ஒருவரின் உடல் செயற்பாட்டிற்கு ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு லிட்டர் தண்ணீர் தேவை.

இவ்வாறு நீர் கிடைக்காத பட்சத்தில் நீரிழப்புக்கு ஆளாகி உடலில் செல்கள் செயலிழந்துவிடும் என்றும், எனவே தேவையான அளவில் நீரை பருகுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், வரலாற்றில் ஏற்பட்ட காலநிலை மாற்றங்களுடன் ஒப்பிடுகையில், கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் இருந்த வெப்பநிலையை விட இந்த ஆண்டு வெப்பநிலை அதிகமாக உள்ளது.

எனவே கடும் வெப்பமான காலநிலை காரணமாக சிறு பிள்ளைகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட வேண்டுமென சிறுவர் வைத்திய நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

அதன்படி, நீரிழப்பைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பெற்றோரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: