பிரித்தானியாவில் மீண்டும் பொதுவாக்கெடுப்பு?

Saturday, June 25th, 2016

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகியது தொடர்பாக நடத்தப்பட்ட வாக்கெடுப்பை நிராகரித்துவிட்டு புதிதாக வாக்கெடுப்பு ஒன்றை நடத்த வேண்டும் தற்போது கோரிக்கை எழுந்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா நீடிப்பது தொடர்பாக நடத்தப்பட்ட பொதுவாக்கெடுப்பில் சுமார் 75 சதவிகித மக்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.இதில், 51.9 சதவிகித மக்கள்வெளியேற வேண்டும்என்றும் 48.1 சதவிகித மக்கள்நீடிக்க வேண்டும்என்றும் வாக்களித்துள்ளனர்.

இதன் மூலம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளதுஇந்நிலையில், நடந்து முடிந்த பொதுவாக்கெடுப்பு குறித்து தற்போது அரசுக்கு புதிய கோரிக்கை ஒன்று எழுந்துள்ளது.

அதாவது, பொதுவாக்கெடுப்பு நடந்து முடிவுகள் வெளியாகும்போது, அது 60 சதவிகித்திற்கு குறைவாக இருந்தால், மீண்டும் பொதுவாக்கெடுப்பு நடத்த வழிவகை செய்யும் புதிய விதிமுறையை அறிமுகப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் ஓன்லைன் மூலமாக கையெழுத்திட்டு வருகின்றனர்.இது சாத்தியமானால், தற்போது நடந்து முடிந்த பொதுவாக்கெடுப்பை நிராகரித்துவிட்டு புதிதாக வாக்கெடுப்பு நடத்தும் சூழல் உருவாகும்.

ஓன்லைன் மூலம் பொதுமக்கள் 10,000 கையெழுத்துக்கள் போட்டால், அதற்கு அரசு முறையான பதில் அளிக்க வேண்டும். இதுவே 1,00,000 கையெழுத்தாக அதிகரித்து இருந்தால், பாராளுமன்ற விவாதத்தில் இந்த விவகாரம் ஆலோசிக்கப்படும்தற்போது இரண்டாவது பொதுவாக்கெடுப்பு குறித்து எழுந்துள்ள இந்த ஓன்லைன் கோரிக்கையானது 90,000 கையெழுத்துக்களை நெருங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts: