அடுத்த ஜி20 மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு புட்டினிற்கு அழைப்பு விடுக்கப்படும் – பிரேசில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா தெரிவிப்பு!

Sunday, September 10th, 2023

அடுத்த வருடம் பிரேசில் தலைநகரில் இடம்பெறவுள்ள ஜி20 உச்சிமாநாட்டில் ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் கலந்துகொண்டால் அவர் கைதுசெய்யப்படமாட்டார் என பிரேசில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா தெரிவித்துள்ளார்.

அடுத்த ஜி20 மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு புட்டினிற்கு அழைப்பு விடுக்கப்படும் என தெரிவித்துள்ள அவர் புட்டினால் பிரச்சினைகள் இன்றி பிரேசில் வரமுடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.நான் பிரேசில் ஜனாதிபதி அவர் பிரேசில் வருகின்றார் கைதுகள் எதுவுமில்லை என பிரேசில் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்

இந்தியாவில் இடம்பெறும் ஜி-20 மாநாட்டில் ஏன் ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் கலந்துகொள்ளவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.

மார்ச் மாதம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விளாடிமிர் புட்டினிற்கு எதிராக பிடியாணையை பிறப்பித்தது. அவர் உக்ரைனில் யுத்த குற்றங்களில் ஈடுபட்டார் என குற்றம்சாட்டியுள்ளது.

இதன் காரணமாக ரஸ்யாவுக்கு வெளியே சென்றால் தான் கைதுசெய்யப்படும் நிலையை புட்டின் தவிர்க்க விரும்புகின்றார்.

ஆபிரிக்காவில் சமீபத்தில் இடம்பெற்ற பிரிக்ஸ் மாநாட்டை அவர் தவிர்த்தார். கடந்த வருடம் ஐசிசியின் பிடியாணைக்கு முன்னரே அவர் பாலியில் இடம்பெற்ற ஜி-20 மாநாட்டில் கலந்துகொள்ளவில்லை.

உக்ரைன் விவகாரம் தொடர்பில் சர்வதேச அரங்கில் தனிமைப்படுத்தப்படுவதை அவர் தவிர்க்க விரும்புகின்றார் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வாக்னர் குழுவின் கிளர்ச்சி காரணமாக ரஸ்யாவில் புட்டினின் பிடியில் தளர்ச்சி ஏற்பட்டுள்ளது. புட்டினிற்கு பதில் ரஸ்ய வெளிவிவகார அமைச்சர் ஜி20 மாநாட்டில் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:


சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றாத இடங்களில் கொரோனா நோயாளிகள் கண்டறியப்பட்டால் நடைமுறைகளை மீண்டும் முத...
டிசம்பர் மாதம் அரச ஊழியர்களுக்கு பல சம்பளச் சலுகைகளை வழங்க ஜனாதிபதி திட்டம் - நாடாளுமன்ற உறுப்பினர் ...
இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் - இலங்கையின் நிலைப்பாட்டை அறிவிக்குமாறு வலியுறுத்து!.