பிரித்தானியப் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை!
Friday, November 16th, 2018
பிரித்தானியாவின் பிரதமர் தெரேசா மே இற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றினை கொண்டுவர கன்சர்வேடிவ் கட்சி தீர்மானித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
பிரிட்டனானது ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் பிரிட்டன் ஓர் உடன்பாடு செய்து கொண்டுள்ளது. அந்த நகல் உடன்பாட்டிற்கு பிரிட்டிஷ் அமைச்சரவையில் போதிய ஆதரவு இருந்தால் மட்டுமே அந்த உடன்பாடு நடைமுறைக்கு வரும்.
ஐரோப்பிய ஒன்றிய அமைப்பிலிருந்து பிரிட்டன் விலகுவதற்கு ஆதரவாக பிரிட்டிஷ் மக்கள் வாக்களித்து ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில் தெரேசா மே சிரமப்பட்டு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் உடன்பாடு கண்டுள்ள நிலையில், குறித்த உடன்பாட்டிற்கு பிரிட்டனில் எதிர்ப்பு வலுப்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
பூண்டோடு அழித்து விடுவோம் வட கொரியாவை மிரட்டும் தென் கொரியா!
எல்லையில் தடுப்புச்சுவர் கட்ட டிரம்ப் உத்தரவு - மெக்சிகோ அதிபர் கடும் கண்டனம்!
பிரெக்சிற் பேச்சுவார்த்தைகளின் சில உடன்பாடுகள் தோல்வி
|
|
|


