பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோங் அமைச்சரவையில் மாற்றம்

பிரான்ஸ் அமைச்சரவையிலிருந்து விலகிய அமைச்சர்களுக்கு பதிலாக ஜனாதிபதி இமானுவல் மக்ரோங் புதிய நியமனங்களை வழங்கியுள்ளார். அரசியலுக்கு வெளியில் உறவினர்கள் அல்லாத வகையில் மேற்படி நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
பெண் தொழிலதிபரான ஃபுளோரன்ஸ் பார்லி பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சராகவும் சட்ட வல்லுநர் நிகோல் பெல்லோபட் நீதி அமைச்சராகவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். பெண் தொழிலதிபரான ஃபுளோரன்ஸ் பார்லி முன்னர் சோஷலிஸ்ட் அரசாங்கத்தில் பணியாற்றியவராவார்.
விவசாய அமைச்சுப் பதவியிலிருந்த ஜக்குயிஸ் மெஸாட் பிராந்திய திட்டமிடல் அமைச்சுக்கு மாற்றப்பட்டுள்ளார். அதேவேளை ஜனாதிபதி இமானுவல் மக்ரோங் ஆதரவாளரான ஸ்டெபான் ட்ரவேர்ட்டிற்கு விவசாய அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடாளுமன்ற நிதிகளை தவறாக பயன்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட இணைந்த மத்தியவலதுசாரி கட்சியான MoDem கட்சியின் அமைச்சரவை அமைச்சர்களான நீதி அமைச்சர் பிரான்சுவா பெய்ரூ பாதுகாப்பு அமைச்சர் சில்வியே கௌலார்ட் மற்றும் ஐரோப்பிய வெளிவிவகார அமைச்சர் மரிலே டி சார்னெஸ் ஆகியோர் ராஜினாமா செய்துகொண்டதை தொடர்ந்து மேற்படி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
Related posts:
|
|