பிரபல கொல்ப் வீராங்கனை கொலை!
Wednesday, September 19th, 2018
அமெரிக்காவின் பிரபல கொல்ப் வீராங்கனையான 22 வயதான சீலியா பார்குயின் ( Celia Barquin) என்பவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். அமேஸ் பகுதியிலுள்ள கொல்ப் விளையாட்டு மைதானம் ஒன்றில் அவரது விளையாட்டு சாதனங்கள் தனித்து விடப்பட்டிருப்பதைக் கண்ட சக விளையாட்டு வீர வீராங்கனைகள் அவரைத் தேடிய போது சீலியா உயிரிழந்த நிலையில் காணப்பட்டிருந்தார்.
இதனையடுத்து காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டதனையடுத்து அங்கு சென்ற காவல்துறையினர் சீலியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைகளுக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையார் என்ற சந்தேகத்தின் பேரில் 22 வயது இளைஞர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
Related posts:
துபாய் டூட்டி பிரீ டென்னிஸ் கிண்ணத்தை வென்றார் ஸ்விடோலினா !
இலங்கை கிரிக்கட் துடுபாட்ட பயிற்சியாளர்கள் அறிவிப்பு
கொரோனா வைரஸ் : சுமார் 85,000 கைதிகள் தற்காலிகமாக விடுவிப்பு!
|
|
|


