பிரதமர் பதவிக்கு ஷின்ஸோ மீண்டும் போட்டி!

ஜப்பானில் அடுத்த மாதம் 20-ஆம் தேதி நடைபெறவிருக்கும் பிரதமர் தேர்தலில் மீண்டும் போட்டியிடவிருப்பதாக அந்த நாட்டின் தற்போதைய பிரதமர் ஷின்ஸோ அபே அறிவித்துள்ளார்.
இதற்காக, ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சியின் தலைவராக அவர் விரைவில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஷின்ஸோ அபே இந்தத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், ஜப்பானில் மிக நீண்ட காலத்துக்குப் பிரதமராக இருந்தவர் என்ற பெருமையைப் பெறுவதற்கான வாய்ப்பு அவருக்குக் கிடைக்கும்.
Related posts:
8 அமைச்சர்கள் பதவி நீக்கப்பட்டமையை எதிர்த்து ஸ்பெயினில் ஆர்ப்பாட்டம்
வடகொரியாவுக்கு புதிய பொருளாதார தடை - அமெரிக்கா!
குடியுரிமை பறிக்கப்படும் - உள்துறை அமைச்சர் எச்சரிக்கை?
|
|