குடியுரிமை பறிக்கப்படும் – உள்துறை அமைச்சர் எச்சரிக்கை?

Saturday, November 24th, 2018

தீவிரவாத குற்றங்களில் ஈடுபடுகின்றவர்களின் அவுஸ்திரேலிய குடியுரிமையை பறிக்கப்போவதாக உள்துறை அமைச்சர் பீட்டர் டுட்டன் அறிவித்துள்ள நடைமுறை சட்ட ரீதியான முரண்பாடுகளை ஏற்படுத்தக்கூடும் என அவுஸ்திரேலிய சட்டப்பேரவை தெரிவித்துள்ளது.

குற்றவாளிகள் என்பதற்காக அவர்களை வெளியேற்றுவது சட்டவிரோத செயல் என்றும் அவுஸ்திரேலிய சட்டப்பேரவை தெரிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவில் தீவிரவாத செயல்கள் அதிகரித்துள்ள நிலையில் இவ்வாறான குற்றங்களில் ஈடுபடுகின்றவர்கள் வெளிநாட்டை பூர்வீகமாக கொண்டிருந்தால், அவர்களது அவுஸ்திரேலிய குடியுரிமையை பறித்து அவர்களது பூர்வீக நாடுகளுக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக பீட்டர் டுட்டன் அறிவித்திருந்தார்.

தனது தண்டனைக் காலம் முடிவடைந்த பின்னர் குறித்த நபர் நாடுகடத்தப்படுவார் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

அமைச்சரின் இந்த அறிவிப்பு சர்வதேச விதி முறைகளுக்கு முரணானது என்று அவுஸ்திரேலிய சட்டப்பேரவை கேள்வி எழுப்பியுள்ளது.

எனினும், இதற்கு பதிலளித்துள்ள அமைச்சர் பீட்டர் டுட்டன், தான் மேற்கொள்கின்ற நடவடிக்கையில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று கூறியதாக அவுஸ்திரேலிய ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

Related posts: