பிஜி தீவில் நிலநடுக்கம்!

பிஜி தீவின் அருகே பசிபிக் பெருங்கடல் பகுதியில் இன்று(19) காலை 8.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
அருகாமையில் உள்ள டோங்கா நாட்டில் இருந்து 442 கிலோமீட்டர் மேற்கே பிஜி தீவின் அருகே பசிபிக் பெருங்கடல் பகுதியில் இன்று காலை அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
லெவுக்கா மற்றும் ஓவாலாவ் தீவுகளுக்கு இடையே பசிபிக் பெருங்கடலின் நீர்மட்டத்தில் 559.6 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 8.2 அலகுகளாக பதிவாகியுள்ளது.
இன்றைய நிலநடுக்கம் பல வினாடிகள் நீடித்ததாகவும் லாவ் தீவு கூட்டங்களில் அதிகமாக உணரப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை எனினும், அப்பகுதியில் கடல் அலைகள் ஆர்ப்பரிப்புடன் கொந்தளிப்பாக காணப்படுவதாக அமெரிக்க புவிசார் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Related posts:
செவாலியே விருது பெறுகின்றார் கமல்ஹாசன்!
கொரோனா தாண்டவம்: அமெரிக்காவில் பாரிய நெருக்கடி - இத்தாலியில் ஒரே நாளில் 919 பேர் பலி!
தென்கிழக்கு ஆப்பிரிக்க மொசாம்பிக் கடற்கரையில் படகு விபத்து - 90 பேர் உயிரிழந்தனர் தகவல்!
|
|