இந்தியாவில் தொடர்ந்து காகம், வாத்து அதிக எண்ணிக்கையில் உயிரிழப்பு!

Tuesday, January 12th, 2021

இந்தியாவில் கொரோனா வைரசின் பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில், பல்வேறு பகுதிகளில் பறவை காய்ச்சல் பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி கடந்த 4 ஆம் திகதி ராஜஸ்தானில் 425 பறவைகள் பறவை காய்ச்சலால் இறந்துள்ளதாக கால்நடை பராமரிப்புத்துறை தெரிவித்துள்ளது. அவற்றில் அதிகமாக காக்கைகள் இறந்துள்ளதாக தெரியவந்துள்ளது. மாநிலம் முழுவதும் 15 மாவட்டங்களில் பறவைகள் இறப்பு பதிவாகி உள்ளது.

இதேபோன்று, மத்திய பிரதேசத்தின் சில பகுதிகளிலும் காகங்கள் இறந்துள்ளன. இதேபோல பறவைகள் அதிகமாக வந்து செல்லும் இமாசல பிரதேசத்தில், இடப்பெயர்ச்சி செல்லும் பல பறவை இனங்கள் பறவை காய்ச்சலால் இறந்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வளர்ப்பு பறவைகளான கோழிகள், வான்கோழிகள், வாத்துகள் உள்ளிட்டவற்றின் கழிவுகள், மூக்கு, வாய், கண் இவற்றின் வழியாக பறவை காய்ச்சலை ஏற்படுத்தும் எச்.5.என்.8. வைரஸ் பரவுவதாக எச்சரிக்கப்பட்டு உள்ளது.

Related posts: