அருகருகே பறந்த அமெரிக்க – ரஷ்ய போர் விமானங்கள் – சிரிய வான்பரப்பில் கடும் பதற்றம்!

Tuesday, July 18th, 2023

சிரியாவின் வான்பரப்பில் நேற்று அமெரிக்க போர் விமானமும், ரஷ்ய போர் விமானமும் அருகருகே பறந்தமையினால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான எம்.சி-12 ரக போர் விமானம் பறந்துகொண்டிருந்தபோது திடீரென ரஷ்யாவின் சு-35 ரக போர் விமானம் அதன் அருகே மோதும் வகையில் வந்துள்ளது.

இதனால், திடீரென பரபரப்பு ஏற்பட்டதோடு, பின்னர் உடனடியாக இரு போர் விமானங்களும் விலகி சென்றுள்ளன.

சிரியாவில் இடம்பெற்று வருகின்ற உள்நாட்டு போரின் விளைவாக சிரிய அதிபர் பஷில் அல் அசாத்திற்கு ரஷ்யா தனது ஆதரவை வழங்கி வருவதோடு, ஆரம்பத்தில் சிரியாவில் குர்திஷ் கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்து வந்துள்ளது.

ஆனால், தற்போதைய சூழலில் சிரியாவில் பதுங்கியுள்ள ஐ.எஸ். பயங்கரவாதிகளை குறிவைத்து அமெரிக்கா வான்வெளி தாக்குதல் மட்டும் நடத்தி வருகிறது.

அத்துடன், சிரியாவின் வான் பகுதியில் அவ்வப்போது ரோந்து பணியிலும் அமெரிக்கா ஈடுப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

000

Related posts: