பாடம் புகட்டிய மக்கள்!

நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தென்மலை, ஏ.சுப்பிரமணியபுர பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் வாக்களிக்கவில்லை.இந்த இரண்டு பகுதிகளிலும் கடந்த பல ஆண்டுகளாகவே குடிநீர் பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதுதொடர்பாக பலமுறை புகார்கள் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, போராட்டங்கள் நடத்தியும் எவ்வித பலனும் இல்லாமல் போனது.
மேலும் தேர்தல் பிரசாரத்தின் போதும் எந்தவொரு அரசியல் கட்சியை சேர்ந்த வேட்பாளர்களையும் தங்கள் ஊருக்குள் வரவிடாமல் தடுத்துள்ளனர். இந்நிலையில் நடந்த தேர்தலில் யாரும் வாக்களிக்க செல்லவில்லை. தேர்தலுக்காக ஏ.சுப்பிரமணியபுரத்தில் ஒரு வாக்குச்சாவடியும், தென்மலையில் மூன்று வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டு இருந்தன.
யாரும் வராததால் வாக்குசாவடிகள் வெறிச்சோடி காணப்பட்டன. இதில் தென்மலையில் உள்ள வாக்குச்சாவடியில் மொத்தம் உள்ள 2640 ஓட்டுகளில் வெறும் 30 வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்தது. ஏ.சுப்பிரமணியபுரத்தில் உள்ள வாக்குச்சாவடியில் மொத்தம் 591 ஓட்டுகளில் ஒரு ஓட்டு கூடபதிவாகவில்லை.
Related posts:
|
|