சீனாவை நிடா சூறாவளி நாளை தாக்க கூடும்: தேசிய வானியல் ஆய்வு மையம் எச்சரிக்கை!

Monday, August 1st, 2016

சீனாவின் தெற்கு மாகாண பகுதியான குவாங்டாங்கை நாளை நிடா சூறாவளி தாக்கலாம் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இது பற்றி அந்நாட்டின் தேசிய வானியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள எச்சரிக்கை அறிவிப்பில், கடலோர பகுதியில் வீசும் கடும் காற்று மற்றும் கனமழை பொழிவினால் குவாங்டாங், பியூஜியான் மற்றும் ஹைனான் மாகாணங்கள் மற்றும் குவாங்சி ஜுவாங் சுயாட்சி பகுதி ஆகிய இடங்களில் பாதிப்பினை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சீனாவில் இந்த ஜூனில் இருந்து தேசிய பேரிடர்களால் 800 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.  கடந்த 2011ம் ஆண்டிலும் இதே போன்ற மோசமிக்க விளைவுகள் ஏற்பட்டன.  சீனாவை இவ்வருடம் தாக்கும் 4வது சூறாவளி நிடா ஆகும்.  பிலிப்பைன்ஸ் கடலோர பகுதியில் உள்ள இந்த புயல் நிதி மையம் ஆக இருக்கும் ஹாங்காங் நகரையும் தாக்கும் என வானிலை அறிக்கைகள் சுட்டி காட்டியுள்ளன.

நிடா புயல் நில பகுதியினை அடைந்ததும் ஒரு வினாடிக்கு 38-45 மீட்டர்கள் வேகத்தில் காற்று வீசும் என எதிர்நோக்கப்படுகிறது.  இந்த ஜூலை தொடக்கத்தில் நெபர்டக் புயல் ஏற்படுத்திய பாதிப்பில் குறைந்தது 4 லட்சத்து 20 ஆயிரம் சீனர்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறினர்.  இதனால் பியூஜியான் மாகாணத்தில் 107 கோடி டாலர் மதிப்பிற்கும் கூடுதலாக இழப்பு ஏற்பட்டது.

Related posts: