மாலத்தீவு அதிபர் தேர்தல் வேட்பாளர் அறிவிப்பு!

Monday, July 2nd, 2018

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான மாலத்தீவு அதிபராக அப்துல்லா யாமீன் பதவி வகிக்கிறார்.

செப்டம்பரில் நடக்கும் அதிபர் தேர்தலில் அப்துல்லா யாமீன் மீண்டும் போட்டியிடுகிறார். அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் பல தலைவர்கள் சிறைகளிலோ வெளிநாடுகளிலோ உள்ளனர்.

அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்த முகம்மது நஷீத் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் கமிஷன் அறிவித்தது. அதனால் போட்டியிலிருந்து விலகுவதாக சமீபத்தில் அவர் அறிவித்தார்.இதையடுத்து அப்துல்லா யாமீனை எதிர்த்து போட்டியிட புதிய தலைவரை எதிர்க்கட்சிகள் தேர்ந்தெடுத்துள்ளன.

இது குறித்து மாலத்தீவு ஜனநாயக கட்சி செய்தி தொடர்பாளர் ஹமித் அப்துல் கபூர் நிருபர்களிடம் நேற்று கூறுகையில் ”அதிபர் தேர்தலில் போட்டியிட எதிர்க்கட்சிகள் சார்பாக மாலத்தீவு ஜனநாயக கட்சியின் பார்லிமென்ட் தலைவர் இப்ராஹிம் முகம்மது சோலிஹ் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்” என்றார்.

Related posts: