பாகிஸ்தான் இந்தியா மீது அணுஆயுத தாக்குதலுக்கும் தயார் – பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்!

இந்தியா மீது அணு ஆயுதத் தாக்குதல் நடத்துவதற்கு தாங்கள் தயார் என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் கவாஜா முகம்மது ஆசிப்தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் எந்தவொரு தாக்குதலையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக இந்திய இராணுவத் தளபதி பிபின் ராவத் அண்மையில் கூறியிருந்தகருத்திற்குப் பதிலளிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில்,
இந்திய இராணுவ தளபதியின் பொறுப்பற்ற இந்தப் பேச்சு அவரது பதவிக்கு ஏற்றதல்ல. இதன் மூலம் அவர் அணுஆயுத சண்டைக்கு அழைப்பு விடுக்கிறார்.எனினும் அது தான் இந்தியாவின் ஆசை என்றால் அவர்கள் எங்களின் பலத்தை சோதித்துப் பார்க்கட்டும். யார் பலம் வாய்ந்தவர்கள் என்பது விரைவில்காட்டப்படும்” என குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
22 விமான நிலையங்கள் மீது தாக்குதல் திட்டம்? -இந்திய முழுவதும் பதற்ற நிலை!!
சசிகலா கணவர் நடராஜன் காலமானார்!
ரஷ்ய எண்ணெய்யை தடை செய்வதாக அமெரிக்கா, பிரித்தானியா அறிவிப்பு!
|
|