பாகிஸ்தானில் பயங்கரவாதத் தாக்குதலில் – 10 பேர் உயிரிழப்பு!.

Tuesday, February 6th, 2024

பாகிஸ்தானில் உள்ள  பொலிஸ் நிலையமொன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

கைபர்-பக்துன்க்வா மாகாணம், டிராபன் பகுதியில் உள்ள பொலிஸ் நிலையத்தின் மீதே இன்று அதிகாலை 3 மணியளவில், துப்பாக்கிச் சூடு நடத்தியும், பயங்கரமான ஆயுதங்களைக்  கொண்டும், பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இத்தாக்குதலில் பொலிஸ் அதிகாரிகள் 10 பேர் உயிரிழந்துள்ளதோடு, 6 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் குறித்த  பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

000

Related posts:

முகமாலையில் சீருடைகள் எலும்புத் துண்டுகள் மீட்பு - பளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுப்பு!
கிளிநொச்சியில் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அறிக்கை கோரப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவ...
செனல் 4 ஆவணப்படத்தில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில், விசாரணை செய்வதற்கான நாடாளுமன்ற...