பாகிஸ்தானில் உயர் நீதிமன்ற நீதிபதியின் மகன் கடத்தல்!

ஒரு மூத்த நீதிபதியின் மகன் காணாமல் போயுள்ளதாகவும், அவர் கடத்தப்பட்டுள்ளார் என்ற சந்தேகங்கள் இருப்பதாகவும் தெற்கு பாகிஸ்தான் நகரமான கராச்சி போலிசார் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் திங்களன்று, சிந்து உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஜ்ஜத் அலி ஷாவின் மகன் அவாய்ஸ் அலி ஷா, வணிக வளாகத்திற்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருக்குள் வீசப்பட்டு கொண்டுசெல்லப்பட்டதாக கூறியுள்ளனர்.இதுவரை சந்தேகத்திற்குரிய கடத்தல்காரர்களிடம் இருந்து எந்த வித தொடர்பும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த மாதம் அமெரிக்கா மற்றும் ஆப்கன் படைகள் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கடத்தப்பட்ட பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் யூசுப் ரஸா கிலானியின் மகன், அலி ஹைதர் கிலானியை மீட்டனர். அலி ஹைதர் கிலானியை தீவிரவாதிகள் முல்தான் நகரில் கடத்தி, பின் பாகிஸ்தான் எல்லையை தாண்டி ஆப்கானிஸ்தானுக்குள் கொண்டு சென்றிருந்தனர்.
Related posts:
மாயமான மலேசிய விமானம் தொடர்பில் மீண்டும் புதிய சர்ச்சை!
பாலம் இடிந்து விபத்து 30 பேர் பலி: இத்தாலியில் சோகம்!
இஸ்ரேல் - ஹமாஸ் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான உலக நாடுகள் வலுவான ஆதரவு - ஐ.நா.பொதுச் சபையில் நி...
|
|