பாகிஸ்தானிலிருந்து யாத்திரிகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஈரானில் விபத்து – 28 பயணிகள் உயிரிழப்பு!
Wednesday, August 21st, 2024
பாகிஸ்தானிலிருந்து யாத்திரிகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஈரானின் யாசாத் பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 28 பயணிகள் உயிரிழந்தனர்.
நேற்று (20) இரவு இடம்பெற்ற இந்த விபத்தில் மேலும் 23 பயணிகள் காயமடைந்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதில் படுகாயமடைந்த 14 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
7 ஆம் நூற்றாண்டில் இறந்த ஷியா துறவி ஒருவரை நினைவுகூருவதற்காக ஈரான் வழியாக ஈராக் சென்றபோது அவர்கள் இந்த ஆபத்தை எதிர்கொண்டுள்ளனர்.
000
Related posts:
வகுப்பறையில் செல்போன் பயன்படுத்தினால் ரூ.10 ஆயிரம் அபராதம்!
சுரங்க நிலச்சரிவு - உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 ஆக உயர்வு!
பிரதமரை சங்கடத்தில் ஆழ்த்திய புகைப்படம்!
|
|
|


