வகுப்பறையில் செல்போன் பயன்படுத்தினால் ரூ.10 ஆயிரம் அபராதம்!

Wednesday, July 6th, 2016

வகுப்பறையில் செல்போன் பயன்படுத்தினால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று கல்லூரி நிர்வாகம் மாணவ-மாணவிகளுக்கு அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கிண்டி பொறியியல் கல்லூரி எச்சரிக்கை விடுத்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கிண்டி பொறியியல் கல்லூரி உள்ளது. அந்த கல்லூரியின் நிர்வாகம் மாணவ-மாணவிகளுக்கு எச்சரிக்கை விடுத்து சுற்றறிக்கை ஒன்றை விடுத்து நோட்டீசு போர்டில் ஒட்டி உள்ளது.

அந்த சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கிண்டி பொறியியல் கல்லூரியில் வாகனங்கள் நிறுத்த உத்தரவிட்டுள்ள இடத்திற்கு மாறாக இருசக்கர வாகனங்களை நிறுத்தினால் ரூ.2 ஆயிரம் அபராதமும், கார் உள்ளிட்ட 4 சக்கர வாகனங்களை நிறுத்தினால் ரூ.6 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும். இருசக்கர வாகனத்தை வளாகத்தில் ஓட்டினால் ரூ.5 ஆயிரம் அபராதமும், கார் உள்ளிட்ட 4 சக்கர வாகனங்களை ஓட்டினால் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும்.

வளாகத்தில் கேக் வெட்டி கொண்டாடினால் அல்லது பட்டாசு வெடித்தால் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.75 ஆயிரம் வரை செலுத்தவேண்டும்.

கிண்டி பொறியியல் கல்லூரி வளாகத்தில் மாணவர்களோ அல்லது மாணவிகளோ பாலியல் தொந்தரவு கொடுத்தால் அவர்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் அல்லது 2 வருடம் சிறை தண்டணை விதிக்கப்படும் அல்லது அந்த மாணவர் அல்லது மாணவி கல்லூரியில் இருந்து நீக்கப்படுவார்.

மேலும் மாணவர் அல்லது மாணவி வகுப்பறையில் செல்போன் பயன்படுத்தினால் பயன்படுத்தியவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். அடையாள அட்டை அணியாமல் வந்தால் அவருக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் உண்டு என அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts: