பலஸ்தீனத்தில் நகராட்சி தேர்தல்களை ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவு!

Friday, September 9th, 2016

பலஸ்தீனத்தில் அடுத்த மாதம் நடைபெறவிருந்த நகராட்சி தேர்தல்களை ஒத்திவைக்குமாறு நீதிமன்றம் ஒன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த பத்து ஆண்டுகளில், ஃபத்தா மற்றும் ஹமாஸ் இனத்தினர் இடைடே நடைபெறும் முதல் தேர்தல் ஆகும்.இருதரப்பினரும் தங்கள் சமூகங்களுக்கு வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதால் அங்கு அதிகளவில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

ஹமாஸ் பிரிவினர் அதிகம் வாழும் காசா பகுதியில் ஃபத்தா பிரிவினரை சேர்ந்த வேட்பாளர்கள் சிலர் நீக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தலை ஒத்தி வைப்பதற்கான உத்தரவை நீதிமன்றம் எடுத்துள்ளது.இந்த உத்தரவை எதிர்த்து ஹமாஸ் பிரிவை சேர்ந்தவர்கள் நீதிமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு அரசியல் சார்ந்த எடுக்கப்பட்ட தீர்ப்பு என்றும் விமர்சித்துள்ளனர்.

160823133834_palestine_promopic_512x288_bbc_nocredit

Related posts: