பர்ஹாம் சலே ஈராக்கின் புதிய ஜனாதிபதியாக தேர்வு!
Wednesday, October 3rd, 2018
ஈராக் பாராளுமன்ற உறுப்பினர்கள் புதிய ஜனாதிபதியாக பர்ஹாம் சலேவை தேர்வு செய்துள்ளனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
ஈராக்கில் ஜூலை 12 ஆம் திகதி பாராளுமன்ற தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் மதகுரு மக்தாதா தலைமையிலான சயிரூன் கூட்டணி 54 இடங்களில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், ஈராக் நாட்டின் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான பாராளுமன்ற கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் குர்தீஷ் இனத்தைச் சேர்ந்த குர்தீஷ் தேசபக்த யூனியன் கட்சியின் வேட்பாளராக பர்ஹாம் சலேவும், குர்தீஷ் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக பவுட் ஹூசைனும் போட்டியிட்டனர்.
இந்த தேர்தலில் பர்ஹாம் சலே பெரும்பான்மையுடன் ஈராக்கின் புதிய ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
Related posts:
செம்மரக் கடத்தல் வழக்கு : 97 தமிழர்களுக்கு சிறை!
‘சார்க்’ மாநாட்டில் இந்தியா பங்கேற்காது – இந்திய வெளியுறவு அமைச்சர்.!
ரஷ்யாவுக்கு ட்ரோன்களை விநியோகித்ததாக ஈரான் ஒப்புதல் - யுக்ரைன் யுத்தத்துக்கு பல மாதங்களுக்கு முன்னர்...
|
|
|


