பருவநிலை மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு மோடிக்கு அழைப்பு!

பிரித்தானியாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள பருவநிலை தொடர்பான மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய தலைநகர் லண்டனில் நடைபெறவுள்ள குறித்த மாநாட்டில் புதிய பருவநிலை திட்டங்களை முன்வைக்க விரும்பும் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும்.
அதனடிப்படையில் இம்முறை நடைபெறவுள்ள மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் பருவநிலை மாற்றம் தொடர்பான மாநாடு இந்த மாதம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. கொரோனா காரணமாக அந்த மாநாடு அடுத்த ஆண்டிற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இஸ்ரேல் போர் விமானம் சிரியாவில் சுட்டு வீழ்த்தப்பட்டதா?
4 மாடிகளை கொண்ட குடியிருப்பில் தீ விபத்து - 7 சிறுவர்கள் பலி!
மரியபோல் மீது ரஷ்யப் போர்க் கப்பல்கள் வெடிகுண்டுத் தாக்குதல்!
|
|