அமெரிக்க குடியேற்ற சட்டத்தில் சீர்திருத்தங்கள் கொண்டுவர வேண்டும் – ட்ரம்ப்!

Wednesday, December 13th, 2017

நியூயோர்க் குண்டுவெடிப்பு சம்பவம் அமெரிக்க குடியேற்ற சட்டத்தில் சீர்திருத்தங்கள் கொண்டுவர வேண்டும் என்பதை சுட்டிக்காட்டுவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

நியூயோர்க் நகரின் மன்ஹட்டன்  பயணிகள் பேருந்து தரிப்பு நிலையத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தில் நால்வர் காயமடைந்தனர்.

சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்டவர் பங்களாதேஸ் ஏதிலியான 27 வயதுடைய அகேயட் உல்லா ; என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இந்த சம்பவம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்ப் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ‘தாக்குதல் நடத்தியதாக கைது செய்யப்பட்ட பங்களாதேஷைச் சேர்ந்தவர், புலம்பெயர்தல் விஸா மூலம் அமெரிக்கா வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் திட்டம் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும்.எனவே அமெரிக்க குடியேற்ற சட்டத்த்தில் சீர்திருத்தங்கள் கொண்டுவர வேண்டும் என அந்த அறிக்கையில் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

Related posts: