வைத்தியசாலையில் ஒக்சிஜன் பற்றாக்குறை : 70 குழந்தைகள்  துடிதுடித்து பலி!

Monday, August 14th, 2017

 

உத்திர பிரதேசம் – கோரக்பூரில் பாபா ராகவ்தாஸ் எனப்படும் அரச மருத்துவமனையில் ஏற்பட்ட ஒக்சிஜன் பற்றாக்குறைக் காரணமாக பலியான குழந்தைகளின் எண்ணிக்கை 70 ஆக உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மருத்துவமனையின் கவனயீனமும், அலட்சியப் போக்குமே இதற்கு காரணம் எனவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

குறித்த விடயம் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த முதல்வர் ஆதித்யநாத், குழந்தைகள் இறப்புக்கு ஒக்சிஜன் தட்டுப்பாடு காரணமில்லை எனக் கூறியுள்ளார்.

மேலும், இது தொடர்பில் நீதித்துறை அளிக்கும் விசாரணை அறிக்கையின் அடிப்படையில் தவறிழைத்தோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ள அவர் ஒக்சிஜன் தட்டுப்பாடு குறித்து தமக்கு அறிவிக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

ஒக்சிஜன் விநியோகித்து வரும் நிறுவனத்திற்கு கடந்த 5ஆம் திகதியே அரசு பணம் செலுத்திவிட்டதாகவும் கூறிய ஆதித்யநாத் இது தொடர்பில் தகுந்த விசாரணைகள் எடுக்கப்படும் எனவும் மேலும் கூறியுள்ளார்.

இந்த நிலையில் மரணமடையும் குழந்தைகளின் எண்ணிக்கை மேலும் உயர்வடைந்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள காரணத்தால் இன்றைய தினம் ஆதித்யநாத் மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

Related posts: