இஸ்ரேல் போர் விமானம் சிரியாவில் சுட்டு வீழ்த்தப்பட்டதா?

Wednesday, September 14th, 2016

அமெரிக்கா, ரஷ்யா இடையே ஏற்பட்டுள்ள உடன்படிக்கையின்படி சிரியா முழுவதும் நேற்று முன்தினம் மாலை முதல் போர் நிறுத்தம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இஸ்ரேல் போர் விமானம் ஒன்றும், ஆளில்லா விமானம் ஒன்றும் தங்கள் நாட்டுக்குள் புகுந்து, அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதி மீது தாக்குதல் நடத்தியதாகவும், அதைத் தொடர்ந்து அவற்றை சுட்டு வீழ்த்தி விட்டதாகவும் சிரியாவின் இராணுவம் நேற்று அறிவித்தது. போர் விமானம் குனீத்ரா மாகாணத்திலும், ஆளில்லா விமானம் டமாஸ்கஸ் மாகாணத்திலும் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அது மேலும் கூறியது.

ஆனால் இந்த தகவல்களை இஸ்ரேல் மறுத்துள்ளது.

இதுபற்றி இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் கூறும்போது, ‘‘இன்று (நேற்று) காலை ஏவுகணைகள் சிரியாவில் இருந்து ஏவப்பட்டன. சிரியாவின் நிலைகள் மீது இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் குறி வைத்ததை தொடர்ந்து இந்த ஏவுகணை வீச்சு நடந்தது. ஆனால் இதில் எங்கள் விமானங்களுக்கு பாதிப்பு எதுவும் இல்லை’’ என கூறுகிறது.

Syria

Related posts: