பனிச்சரிவில் சிக்கி 3 பேர் உயிரிழப்பு!
Wednesday, January 16th, 2019
ஆஸ்திரியாவில் பனிச்சரிவில் சிக்கி ஜெர்மனியை சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காணாமல் போயுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆஸ்திரியாவின் வோரேர்ல்பெர்க் மாகாணத்தில் லெக் என்கிற மலைக் கிராமம் உள்ளது. பனிப்பிரதேசமான இங்கு பனிச்சறுக்கு விளையாட்டு பிரபலமானது.
இந்த நிலையில் இங்கு ஏராளமானவர்கள் பனிச்சறுக்கு விளையாடி கொண்டிருந்தபோது அங்கு திடீரென பெரும் பனிச்சரிவு ஏற்பட்டது.
இதில் சிக்கி ஜெர்மனியை சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
ஜப்பான் ஏவிய செயற்கைக்கோள் மாயம்!
உடல்நலக்குறைவால் விமானத்தில் உயிரிழந்த பயணி!
பிரித்தானியா எண்ணெய் கப்பலை ஆயுதங்களுடன் சுற்றி வளைத்த ஈரான்!
|
|
|


