சிறுவர்கள் வீட்டைவிட்டு வெளியே வந்தால் 200 டொலர்அபராதம்!

Saturday, September 10th, 2016

கனடாவில் இரவு நேரத்தில் சிறுவர் சிறுமியர் வீட்டை விட்டு வெளியே வந்தால் அவர்களது பெற்றோருக்கு ரூ. 200டொலர் அபராதம் விதிக்கப்படும் என அந்நாட்டு நகராட்சி ஒன்று அதிரடியாக அறிவித்துள்ளது.

கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் உள்ள புரூடர்ஹீம் நகராட்சி நிர்வாகம்தான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இந்த நகரில் சமீபகாலமாக திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, இரவு நேரங்களில் குடியிருப்புகளில் புகுந்து கொள்ளையடிக்கும் சம்பவங்களால் அந்நகரப் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்திருக்கின்றனர்.

இந்நிலையில், பொதுமக்கள் மற்றும் சிறுவர், சிறுமியரின் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் புரூடர்ஹீம் நகர மேயர் கார்ல் ஹாச் புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளார். அதன்படி, 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களும், சிறுமிகளும் இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தடையை மீறி யாராவது வீட்டைவிட்டு வெளியே வந்தால், அவர்களது பெற்றோருக்கு முதல் முறை 100 டாலரும், இரண்டாவது முறையாக இதே தவறைச் செய்தால் 200 டாலரும் (ரூ. 13460) அபராதம் விதிக்கப்படும் என மேயர் அறிவித்திருக்கிறார்.

மேலைநாடுகள் பலவும், சிறார் பாதுகாப்பு விஷயத்தில் மிகுந்த அக்கறை செலுத்துகின்றன. அதனால்தான் இதுபோன்ற உத்தரவுகள் வெளியிடப்படுகின்றன. தற்போது தீவிரமாக அமல்படுத்தப்படும் இந்தத் தடை உத்தரவு, எப்போது நீக்கப்படும் என்ற தகவல் தெரியவில்லை.
ஆனால், பாதுகாப்பு என்று வருகிறபோது, அதற்குரிய உத்தரவை எல்லோரும் மதித்துத்தானே ஆக வேண்டும்!

 Untitled-1 copy

 

Related posts: