வழக்கே பொய்யானது: சுவாதி கொலையாளி ராம்குமார்!

Wednesday, August 17th, 2016

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த ஜுன் மாதம் 24ம் தேதி மென்பொறியானர் சுவாதி என்ற இளம்பெண் வெட்டி கொலை செய்யப்பட்டார் இந்த கொலை வழக்கு தொடர்பாக நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தை சுற்றியிருந்த சிசிடிவி காமிர பதிவுகளின் அடிப்படையில் ராம்குமாரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பின்னர் கண்காணிப்பு கேமிரா பதிவுகளை எழும்பூர் நீதிமன்றத்தில் போலீசார் ஒப்படைத்தனர். இந்த வழக்கில், எழும்பூர் நீதிமன்றம் கடந்த வாரம், சுவாதி கொலையாளி தொடர்பான வீடியோ காட்சியை ராம்குமாருடன் ஒப்பிட்டுப் பார்க்க,ராம்குமார் நடந்து செல்லும் காட்சி போன்ற மாதிரி வீடியோவை புழல் சிறையில் போலீசார் வீடியோ பதிவு செய்து அதை தடய அறிவியல் சோதனைக்கு அனுப்பி வைக்கஉத்தரவிட்டது.

இதையடுத்து  கடந்த வாரம் ராம்குமாரை சிறை கண்காணிப்பாளர் முன்னிலையில் நுங்கம்பாக்கம் காவல்துறையினர் வீடியோ எடுத்தனர். இந்நிலையில் கையெழுத்தை ஒப்பிட்டு பார்ப்பதற்காக ராம்குமாரை புழல் சிறையிலிருந்து பலத்த பாதுகாப்புடன் எழும்பூர் நீதிமன்றத்திற்க்கு போலீசார் அழைத்து சென்றனர். எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ராம்குமார் கையெழுத்திட மறுத்ததாக ராம்குமாரின் வழக்கறிஞர் தெரிவித்தார்.

மேலும், சூளைமேட்டில் மேன்ஷன் விண்ணப்பத்தில் தான் கையெழுத்திடவில்லை என கூறிய ராம்குமார் இந்த வழக்கே பொய்யானது என்றும் நீதிபதி முன்பு தெரிவித்தார்.இதுதொடர்பாக எழுத்து மூலம் எழுதி தரும் படி நீதிபதி கூறியதையடுத்து ராம்குமார் தான் சொன்ன விவரங்களை எழுதி கொடுத்தார். பின்னர் ராம்குமார் புழல் சிறைக்கு அழைத்து செல்லபட்டார். இந்த கொலை வழக்கில் ராம்குமார் மாறுபட்ட தகவல்களை அளித்துள்ளதால், அடுத்த கட்ட நடவடிக்கையாக என்னெ;ன்ன செய்ய வேண்டும் என காவல்துறையினர் தீவிர ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்

Related posts: