வட கொரிய ஜனாதிபதியின் மேற்பார்வையில் இராணுவத்தினர் போர் பயிற்சி!

Friday, December 23rd, 2016

வட கொரிய இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்ட போர் பயிற்சிகளை அந்நாட்டுத் தலைவர் கிம் யொங் உன் பார்வையிடுவது தொடர்பான புகைப்படங்களை, அரச தொலைக்காட்சி நேற்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ளது.

அரச தொலைக்காட்சியான KRT வெளியிட்டுள்ள புகைப்படங்களில், இரவு வேளையில் முன்னெடுக்கப்பட்ட போர் விமானங்களின் பயிற்சி மற்றும் ரொக்கட் தாக்குதல் பயிற்சிகள் முதலான புகைப்படங்களும் உள்ளடங்குகின்றன.

இந்த புகைப்படங்களுடன் அரச தொலைக்காட்சி வெளியிட்ட செய்தியில், போர் காலத்தில் இடம்பெறுவது போன்றே குறித்த இராணுவ பயிற்சிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என கிம் யொங் உன் பணித்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆயினும், குறித்த பயிற்சிகள் முன்னெடுக்கப்பட்ட இடம் மற்றும் திகதி தொடர்பான தெளிவான தகவல்கள் அந்த செய்தியில் உறுதியானது.

இதேவேளை ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானம், சர்வதேச அமைப்புக்கள் மற்றும் நாடுகளின் தடைகள் ஆகியவற்றைப் பொருட்படுத்தாத வட கொரியா, தொடர்ந்தும் மிலேச்சத்தனமாக அணுவாயுத விருத்தி மற்றும் அணுவாயுத சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.

இது மட்டுமன்றி அடிக்கடி இத்தகைய போர் பயிற்சிகளில் அந்நாட்டு இராணுவத்தினர் ஈடுபடுவதும், அது கிம் யொங் உன்னின் மேற்பார்வையின் கீழ் இடம்பெறுவதும், வட கொரியா யுத்தத்திற்கு தயாராகின்றதோ என்ற அச்சத்தை சர்வதேசத்தின் மத்தியில் தோற்றுவித்துள்ளது எனலாம்.

dfgh

Related posts: