பங்களாதேஷில் நிலச்சரிவில் சிக்கி 26 பேர் பலி !
பங்களாதேஷில் கடும் மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி சுமார் 26 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பங்களாதேஷில் கடந்த சில நாட்களாக அசாதாரண காலநிலை நிலவுவதனால், கடும் மழைபொழிவை அந்நாடு எதிர் கொண்டுள்ளது. இந்நிலையில் தென்கிழக்கு பகுதியில் அங்காங்கே நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்திருந்தது.
குறித்த மண்சரிவு நிலைமை காரணமாக ரங்காமத் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி மீட்புப் பணி வீரர்கள் உட்பட 21 பேர் பலியாகியுள்ளதாகவும், பந்தர்மன் மாவட்டத்தில் 5 பேர் பலியாகியுள்ளதாகவும் அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் நிலைசரிவில் சிக்கியுள்ள ஏனையவர்களை மீட்கும் பணிகளில் அந்நாட்டு மீட்பு குழுவினர் மும்முரமாக ஈடுப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சிரிய விவகாரத்திற்கு சுமூகமான தீர்வு வேண்டும் – பிரான்ஸ்!
பிரித்தானியக் கடலில் உயிரிழந்த 5 தமிழர்களின் மரணத்தில் சந்தேகம்!
நாங்கள் நல்ல நண்பர்கள் - இந்தியா தொடர்பில் சீனா வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவிப்பு!
|
|
|


