நீர்மூழ்கி கப்பலை தேடும் பணியில் ரஷ்யாவும் !
Saturday, November 25th, 2017
அட்லாண்டிக் கடலில் அண்மையில் காணாமல் போன ஆர்ஜண்டீனா நீர் மூழ்கி கப்பலை தேடும் பணியில் ரஷ்யாவும் இணைந்து கொண்டுள்ளது.
குறித்த நீர் மூழ்கி கப்பலில் 44 ஆர்ஜண்டீனா கடற்படை வீரர்கள் இருந்துள்ளனர். ரஷ்ய ஜனாதிபதி விளாடி மீர் புட்டின் இக்கப்பலை தேடுவதற்கான கப்பல் ஒன்றையும் திறமையான ஊழியர்களையும் வழங்குவதாக தமக்கு உறுதியளித்துள்ளதாக ஆர்ஜண்டீனா ஜனாதிபதி மொரிசியோ மெக்ரீ தெரிவித்துள்ளார்.
நீர் மூழ்கி கப்பல் காணாமல் போன இடத்திலிருந்து கிடைக்கும் சமிக்ஞைகளை ஆர்ஜண்டீனா கடற்படை ஆராய்ந்து வருவதாக ஜனாதிபதி மெக்ரீ தெரிவித்துள்ளார்.
Related posts:
எல்லை நிலவரம் குறித்து ஆலோசனை நவாஸ் ஷெரீப்புக்கு பாகிஸ்தான் அனைத்துக்கட்சிகள் ஆதரவு !
சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - 12 பேர் உயிரிழப்பு!
உக்ரைனிய படைகளுக்கு நெருக்கடி - முதலாம் உலகப் போர் பாணியிலான அகழிகள் - ரஷ்ய படைகள் அதிரடி நடவடிக்கை!
|
|
|


