உக்ரைனிய படைகளுக்கு நெருக்கடி – முதலாம் உலகப் போர் பாணியிலான அகழிகள் – ரஷ்ய படைகள் அதிரடி நடவடிக்கை!

Wednesday, November 30th, 2022

குளிர்காலம் தொடங்கும் போது உக்ரைனிய படைகளுக்கு நெருக்கடியை அதிகரிக்கும் நோக்கில் முதலாம் உலகப் போர் பாணியிலான அகழிகளை ரஷ்ய படைகள் உருவாக்கிவருகின்றனர் என முன்னாள் பிரித்தானிய இராணுவ தலைவர் லார்ட் டன்னாட் தெரிவித்துள்ளார்.

சில வாரங்களுக்கு முன்பு உக்ரைனின் தெற்கு பகுதி நகரமான கெர்சனை ரஷ்ய படைகளின் பிடியில் இருந்து உக்ரைனிய படைகள் விடுவித்தனர்.

கெர்சன் நகரில் இருந்து பின்வாங்கிய ரஷ்ய படையினர்கள் தற்போது உக்ரைனின் டினிப்ரோ ஆற்றங்கரைக்கு அப்பால் உள்ள கிழக்கு பகுதிகளில் அணி திரட்டியுள்ளனர்.

அத்துடன் குளிர்காலம் நெருங்கி வரும் இந்த சூழ்நிலையில் உக்ரைனின் சக்தி நிலையங்கள் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதலை நடத்தி பெரும்பாலான நகரங்களில் உள்ள மில்லியன் கணக்கானவர்களை மின்சாரம் மற்றும் வெப்பம் கிடைக்கப்பெறாத நிலைக்கு தள்ளியுள்ளது.

இதன் மூலம் வரவிருக்கும் குளிர்காலத்தில் உக்ரைனின் பிடியை ரஷ்யா ஒரளவு கையில் வைத்துள்ளது.

இந்நிலையில் பிரித்தானியாவின் முன்னாள் இராணுவ தலைவர் லார்ட் டன்னாட் (Lord Dannatt) அளித்த தகவலில், குளிர்காலம் வரும் போது கெர்சனில் உள்ள உக்ரைனிய படைகளுக்கு சவால்களை முன்வைக்கும் விதமாக ரஷ்யா அங்கு முதலாம் உலகப் போர் பாணியிலான அகழி குழிகளை தோண்டி வருவதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன் ரஷ்யர்கள் தாங்கள் தற்போது பின்தங்கி இருப்பதை அறிவார்கள், மேலும் கூடுதலான அடுத்த பின்வாங்குதலை வழங்க கூடாது என்றும் அறிவார்கள்.

எனவே உக்ரைனின் குளிர்கால ஆதாரப் பிடியை கையில் வைத்து இருக்கும் ரஷ்யா அதிகமாக தோண்டி வருவதாக தெரிவித்துள்ளார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு கெர்சன் நகரை கைப்பற்றிய உக்ரைனிய படைகள், தற்போது டினிப்ரோ ஆற்றங்கரையின் கிழக்கு பகுதிக்கு உள்ள ரஷ்யர்கள் மீது தாக்குதல் நடத்த போராடி வருகின்றனர்.

கெர்சன் நகரை உக்ரைனிய படைகள் கைப்பற்றினாலும் இன்னும் அந்த நகரம் ரஷ்ய படைகளின் பீரங்கி தாக்குதல் வட்டத்திற்குள் தான் இருப்பதாக எச்சரித்த லார்ட், எவ்வளவு விரைவாக ரஷ்ய படைகளை கெர்சன் நகரில் இருந்து பின்னுக்கு தள்ள முடிகிறதோ அதை உக்ரைன் விரைவாக செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் மேற்கத்திய நாடுகள் உக்ரைனை தொடர்ந்து ஆதரிக்க வேண்டும் என்றும், கூட்டாளிகள் எவ்வளவு அதிகமான இராணுவ உபகரணங்களை வழங்க தயாராக இருக்கிறார்கள் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் லார்ட் டன்னாட் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: