நீர்த்தேக்கத்தில் வெடிப்பு : நூற்றுக்கணக்கானோர் மாயம்!

தென்கிழக்கு லாவோசில் நீர்த்தேக்கம் ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பை அடுத்து ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் நூற்றுக் கணக்கான மக்கள் காணாமல் போனதுடன் சுமார் 6600 பேர் வரையில் வீடுகளை இழந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இதில் பலர் உயிரிழந்திருப்பதாக கூறப்படுகின்ற போதும், சரியான எண்ணிக்கை இதுவரையில் வெளியாக்கப்படவில்லை.
சேபின் -சே நாம் நோய் என்ற இந்த நீர்த்தேக்கத்தில் வெடிப்பு ஏற்பட்டதற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.
குறித்த சம்பவத்தை அடுத்து, அந்த நாட்டின் அரசாங்கத்தில் நடைபெறவிருந்த முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் பிரதமர் தொங்லோன் சிசோலித்தினால் பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
சீனாவின் சாதனை : ஒரே ராக்கெட்டில் 5 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தல்!
அணு உற்பத்தி நிலையம் தொடர்பிலும் விவாதம் இடம்பெறலாம்..!
வியட்நாமின் புதிய அதிபராக து லாம், நாடாளுமன்றத்தால் தேர்வு !
|
|