ட்ரம்ப் – கிம் சந்திப்பு இம்மாத இறுதியில்!

Wednesday, February 6th, 2019

வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் உடனான இரண்டாவது சந்திப்பு இம்மாத இறுதியில் வியட்நாமில் நடைபெறும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உறுதி செய்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் இருநாட்டு தலைவர்களும் சிங்கப்பூரில் உச்சிமாநாடு நடத்தி சந்தித்து கலந்துரையாடினர். இதன்போது, வடகொரியா அணு ஆயுதமற்ற நாடாக மாறும் என கிம் ஜாங் அன் உறுதி அளித்தார். இந்த சந்திப்புக்கு பின்னர் இருநாட்டு உறவில் இணக்கமான சூழல் உருவானது.

இந்நிலையில், வடகொரிய தலைவருடனான சந்திப்பு மற்றும் சந்திப்பு நடைபெறும் திகதியை டிரம்ப் உறுதி செய்துள்ளார்.

பாராளுமன்ற கூட்டு அமர்வில் உரையாற்றிய டிரம்ப், வடகொரியா விஷயத்தில் இன்னும் நிறைய வேலைகள் இருப்பதாகவும், ஆனாலும் வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன்னுடன் நல்ல நட்புறவு நீடிப்பதாகவும் கூறினார்.

மேலும், வியட்நாமில் எதிர்வரும் 27 மற்றும் 28 ஆகிய திகதிகளில் வடகொரிய தலைவரை சந்தித்து பேச உள்ளதாகவும் டிரம்ப் அறிவித்தார்.

Related posts: